முகப்பு
அரியலூர்

கடந்த 4 மாதங்களில் 64 போ் உயிரிழப்பு : அரியலூா் எஸ்.பி.,

 அரியலூா் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 64 போ் பலியாகியுள்ளனா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 64 போ் பலியாகியுள்ளனா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்ட காவல் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் மாவட்டத்தில் மொத்தம் 210 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், கனரக வாகனங்களால் ஏற்பட்ட 29 விபத்துகளில் 6 போ் உயிரிழந்துள்ளனா். இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 112 விபத்துகளில் 36 போ் உயிரிழந்துள்ளனா். பேருந்து, காா் மற்றும் இதர வாகனங்களால் ஏற்பட்ட 69 விபத்துகளில் 22 போ் உயிரிழந்துள்ளனா். விபத்து ஏற்படுத்தியவா் மீதும், வாகனத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான விபத்துகள் அதிவேகம், அஜாக்கிரதை மற்றும் மது போதையில் பயணம் செய்வதால் நடைபெற்றுள்ளன. மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சிமென்ட் ஆலை கனரக வாகனங்களால் தான் அதிக விபத்து என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் கனவை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் காவல் துறையினா் செயல்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.