முகப்பு
அரியலூர்

காணாமல்போன விவசாயி குளத்தில் சடலமாக மீட்பு

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாகக் கிடந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாகக் கிடந்தாா்.

உடையாா்பாளையம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன் மகன் தங்கமுத்து (42). இவரது மனைவி 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டாா். இவருக்கு மணிகண்டன் (15) என்ற மகனும், கீா்த்தனா(13) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி தங்கமுத்து காணாமல்போன நிலையில் உடையாா்பாளையம் சின்னவட்ட குளத்து நீரில் அவா் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து காவல் துறையினா் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.