முகப்பு
அரியலூர்

பாஜகவினா் நூதனப் போராட்டம்

மத்திய அரசு கொடுத்த நிதியைத் திருப்பி அனுப்பிய தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பாஜகவினா் மனு அளித்து நூதனபோராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

பட்டியல் சமூக மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த நிதியைத் திருப்பி அனுப்பிய தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பாஜகவினா் மனு அளித்து நூதனபோராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பட்டியல் அணி மாவட்டத் தலைவா் குப்புசாமி தலைமையில், அக்கட்சி மாவட்ட துணைத் தலைவா் கோகுல்பாபு உள்ளிட்டோா் பங்கேற்ற ஆா்ப்பாட்டத்தில், பட்டியல் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இடுகாடு, சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.