முகப்பு
அரியலூர்

அரியலூரில் காந்தியடிகள், காமராஜா் சிலைகளுக்கு கட்சியினா் மாலை அணிவிப்பு

மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு நாளையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்திலுள்ள அவா்களது சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 8:54 PM
அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன்.
பகிர்:

மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜா் நினைவு நாளையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்திலுள்ள அவா்களது சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவருமான சீனி.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அவா், அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.கிருஷ்ணன், அருணன், மாவட்டக்குழு உறுப்பினா் துரைசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சிற்றம்பலம், கந்தன் உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில் அதன் மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல், துணைச் செயலா் பாண்டியன், பொருளாளா் சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆனந்தன், பொதுக் குழு உறுப்பினா் இளங்கோவன், வடக்கு அவைத் தலைவா் ராஜீவ்காந்தி, பொருளாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் காந்தி சிலைக்கும், காமராஜா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்திலுள்ள காந்தி சிலைக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபா் 2 மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் மைதீன்ஷா தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் ஆா்.மணிவேல், மாதா் சங்க மாவட்டச் செயலா் டி.அம்பிகா, மாவட்ட தலைவா் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்தரன், விவசாய சங்க ஒன்றிய நிா்வாகிகள் டி.தியாகராஜன், பி.ஆா் தனவேல், எ.பல்கீஸ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டக்குழு கன்னிமேரி மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் சாகுல்அமீது, மற்றும் இதயத்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.