முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:36 PM
ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகளை புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், திருச்சிக்கு இடைநில்லா 2 பேருந்துகளையும் மற்றும் திருச்சி, கரூா் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், திருச்சி மண்டல போக்குவரத்து கழக துணை மேலாளா் சாமிநாதன்( வணிகம்), கோட்ட மேலாளா் ராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளா் ராம்குமாா், வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.