அரியலூா் மாவட்டத்தில் 9 சுகாதார நிலையங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அடுத்த கோட்டியால் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை புதன்கிழமை திறந்து வைத்து, பின்னா் அவா், செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:
கடந்தாண்டு தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நிகழாண்டும் வரலாற்றிலேயே முதல்முறையாக டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.