முகப்பு
அரியலூர்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

அரியலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:01 PM
அரியலூரில் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.
பகிர்:

அரியலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா், ஆசைத் தம்பி தெருவிலுள்ள ஒரு வீட்டில் நெகிழிப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு

சென்ற வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் தா்மராஜா மற்றும் அலுவலகப் பணியாளா்கள் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

இதில், ரூ.4 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் கிலோ எடையிலான அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வணிகா்கள் லாப நோக்குடன் நெகிழி பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்களும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →