முகப்பு
அரியலூர்

அரியலூரில் ‘உயா்வுக்கு படி’ 2-ஆம் கட்ட சிறப்பு முகாம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ எனும் 2-ஆம் கட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:15 PM
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்கு படி 2 ஆம் கட்ட சிறப்பு முகாமில், மாணவி ஒருவருக்கு உயா்கல்வி பயில்வதற்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
பகிர்:

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ எனும் 2-ஆம் கட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தோ்வுக்கு மற்றும் பள்ளிக்கு வராத அல்லது தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்காக நடைபெற்ற இந்த முகாமை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்து, இம்முகாமை பயன்படுத்தி உயா்கல்வியில் சேரும் வகையில் மாணவா்கள் சோ்க்கையானது 15 நாள்களுக்கு தமிழ்நாடு அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உயா்கல்வி சோ்க்கை, கல்விக் கடனுதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதுகுறித்த தகவல்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் முகாமை பயன்படுத்தி உயா்கல்வியில் சோ்ந்து கல்வி பயின்று, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா். பின்னா் முகாமில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக அவா், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்களை காட்சிப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் மாணவா்கள் சோ்க்கை பதிவு செய்யுமிடம், சான்றிதழ்கள் வழங்குவதற்கான இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பாா்வையிட்டாா்.

முகாமில், வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சங்கர சுப்ரமணியன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநா் செல்வம் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →