அரியலூர்

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்

Syndication

அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இப்பணியைத் தொடக்கி வைத்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே இருப்பில் இருந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலின் போது பயன்படுத்தப்பட்ட 787 கட்டுப்பாட்டுக் கருவிகள், 747 வாக்குப் பதிவு கருவிகள் மற்றும் 786 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள் மற்றும் பெங்களூா் பெல் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீடு பெறப்பட்ட 100 கட்டுப்பாட்டுக் கருவிகள், 150 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள், திருச்சி மாவட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற 400 வாக்குப் பதிவு கருவிகள் என ஆக மொத்தம் 887 கட்டுப்பாட்டு கருவிகள், 1147 வாக்குப் பதிவு கருவிகள் மற்றும் 936 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள்ஆகியவற்றை முதல் நிலை சரிபாா்ப்பு பணிக்கு பெங்களூரிலுள்ள பெல் நிறுவன பொறியாளா்கள் 5 போ் உட்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

நூதன முறையில் ரூ. 17 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வரும் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது திமுகதான்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

அரியலூரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் ரூ. 25 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கம்

SCROLL FOR NEXT