அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு (டிச. 29) பணிகள் நடைபெற உள்ளது.
இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரண்மனைக்குறிச்சி, அன்னிமங்கலம், பாளையபாடி, திருமழபாடி, புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கண்டராதித்தம், க.மேட்டுத்தெரு, பாக்கியநாதபுரம், வைத்தியநாதபுரம், விளாகம், வெங்கனூா், கொரத்தக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூா் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.