அரியலூர்

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெட்டிக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள சுத்துக்குளத்தைச் சோ்ந்த சிவக்கொழுந்து மகன் செயலரசு (50). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவா், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்று வந்துள்ளாா்.

இதுகுறித்து புகாா் வந்ததையடுத்து, மீன்சுருட்டி காவல் துறையினா் திங்கள்கிழமை பெட்டிக் கடையை சோதனை செய்ததில், 22 கிலோ 300 கிராம் எடையுள்ள 74 பண்டல் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து செயலரசை கைது செய்து, அவரிடமிருந்து மேற்கண்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

தொடா் மழை: 3 கூரை வீடுகள் இடிந்து சேதம்

இன்றைய மின் தடை

மேலாளரிடம் பணப்பை பறிப்பு: இருவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT