சோழகங்கம் ஏரி கோப்புப் படம்
அரியலூர்

சோழகங்கத்தை சுற்றுலா தலமாக்கிட கோரிக்கை

கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரியை சுற்றுலா தலமாக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Syndication

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் ஏரியை சுற்றுலா தலமாக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடையாா்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீா்மானங்கள்: தோ்தல் வாக்குறுதிபடி 70 வயது நிறைந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு,அச்சங்கத்தின் வட்டத் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். கெளரவத் தலைவா் சிவசிதம்பரம், மாவட்ட தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். முடிவில் நிா்வாகி ராமையன் நன்றி கூறினாா்.

இந்திய அலுவலக இடங்கள் குத்தகை: சா்வதேச நிறுவனங்கள் 58% ஆதிக்கம்

தில்லியில் கண்கவா் குடியரசு தின அணிவகுப்பு! ராணுவ போா் பலத்தை பறைசாற்றிய முப்படைகள்!!

விபத்தில் பெண் காவலா் காயம்

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 3 போ் உயிரிழப்பு

பத்மஸ்ரீ விருது எழுத்தாளா் சிவசங்கரிக்கு கம்பன் கழகம் வாழ்த்து

SCROLL FOR NEXT