முகப்பு
கரூர்

அவதூறு : அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது

கரூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குறித்து முகநூலில் தவறான தகவல் தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கரூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குறித்து முகநூலில் தவறான தகவல் தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றுபவர் முத்துசாமி. அதே பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர் சுப்ரமணி. இவர்கள் இருவரும், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். 
இவர்கள் கடந்த 19 ஆம் தேதி சிஐடியு சார்பில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற வாயில்கூட்டத்தில் போக்குவரத்து கிளை மேலாளர் ராஜேந்திரன் குறித்து தவறாகப் பேசியதாக கூறப்படுகிறது. 
இதனை தனது முகநூலிலும், கட்செவியிலும் பரப்பினார்களாம்.  இதுகுறித்து கிளை மேலாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பணிமனைக்கு வேலைக்கு வந்த இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.