கரூர்

தீரன் சின்னமலை படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன்சின்னமலையில் 214-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் அவரது சிலைக்கு மற்றும் படத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து

DIN


சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன்சின்னமலையில் 214-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் அவரது சிலைக்கு மற்றும் படத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் மாவட்ட பிரிவு சார்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரத்தினால் ஆன சிலைக்கு அக்கட்சியினர் மாநில வர்த்தக அணிச் செயலாளர் விசா ம. சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவை(தனியரசு) சார்பில் மாவட்டச் செயலாளர் அருள்குமார் தலைமையில் அக்கட்சியினர் தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதேபோல கொங்கு கவுண்டர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT