கரூர்

டேங்கர் லாரி- வேன் மோதல்: தொழிலாளி சாவு

கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் டேங்கர் லாரியும் வேனும் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.

DIN

கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் டேங்கர் லாரியும் வேனும் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம்,உத்தமபாளையம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பக்ருதீன்அல்அகமது(35). இவர் ராமநாதபுரத்தில் உள்ள மீன்கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
 ஞாயிற்றுக்கிழமை  ராமநாதபுரத்திலிருந்து சேலத்துக்கு மீன்களை ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் அ.பிரசாந்துடன்  பக்ருதீன் அல் அகமது சென்றார்.
இவர்கள் வந்த வேன் கரூர் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் வந்த போது,  கரூர் டி.என்.பி.எல். ஆலையிலிருந்து காகிதம் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் ஓட்டுநர் பிரசாந்த், பக்ருதீன் அல் அகமது ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.  தொடர்ந்து கரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பக்ருதீன் அல் அகமது உயிரிழந்தார். பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கரூர் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT