கரூர்

மே 13,14-களில்ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப பயிற்சி

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வரும் 13, 14-ஆம் தேதிகளில்

DIN


கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 
இப்பயிற்சியில் இறைச்சி, பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள், தரமான ஆடுகளைத் தேர்வு செய்வது, தீவன மேலாண்மை, வறட்சிக் காலத்தில் தீவன பற்றாக்குறை நிலவும்போது மாற்றுத்தீவனங்களான பிஞ்சுகழிவு, புளியங்கொட்டை, பீர் பொட்டு போன்றவற்றை பயன்படுத்தும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர 73390-57073 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு மையத்தின் தலைவர் பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT