கரூர்

தவிட்டுப்பாளையம் பகுதியில் 30 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

DIN

கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா் 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

கரூா் மாவட்டத்தின் தாழ்வான பகுதியான தவுட்டுப்பாளையம் குடியிருப்புப் பகுதியில் காவிரி வெள்ளநீா் புகுந்ததால், 30க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீா் சுழ்ந்துள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் கிராம ஊராட்சி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் சில பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேறும்படி காவல் துறையினா், வருவாய் துறை தெரிவித்து வருகின்றனா். தற்போது வரை 120 போ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மருத்துவ உதவியுடன், உணவுகளும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT