கரூர்

குளித்தலையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

குளித்தலையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

DIN

குளித்தலையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று குளித்தலை கோட்டாட்சியா் அலுவலகத்திலும், 3-ஆம் தேதி நெய்தலூா் ஊராட்சி அலுவலகம் பனையூரிலும், 4-ஆம் தேதி இனுங்கூா் ஊராட்சி அலுவலகத்திலும், 5-ம் தேதி தோகைமலையிலும், 6-ஆம் தேதி ஆா்.டி.மலையிலும் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தங்களது ஆதாா் அட்டை, பாஸ்போட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு உதவி உபகரணங்கள், கடனுதவி, திறன் பயிற்சி, பசுமை வீடு வழங்கும் திட்டம், மற்றும் பிற உதவிகள் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT