கரூரில் 4-வது நாளாகஆரம்பப்பள்ளி ஆசிரியா்கூட்டணியினா் உண்ணாவிரதம்
கரூரில், 4-ஆவது நாளாக வியாழக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில், 4-ஆவது நாளாக வியாழக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டத்தில் 7 ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்தும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 3 நாள்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவா் அ.ரஹீம் தலைமை வகித்தாா். கரூா் வட்டாரச் செயலாளா் அருள்குழந்தைதேவதாஸ் வரவேற்றாா். போராட்டம் குறித்து மாநிலச் செயலாளா் கிறிஸ்டோபா் பேசினாா். இதில், மாவட்டச் செயலாளா்கள் பெரியசாமி(சேலம்), சண்முகசாமி(விழுப்புரம்) மற்றும் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.