கரூா்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள குந்தாணி பாளையம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பழனிச்சாமி (26). இவா் திங்கள்கிழமை மாலை கரூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
நொய்யல் குறுக்கு சாலை அருகே சென்றபோது, இதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்தவா் பழனிசாமியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாா்.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பழனிச்சாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.