அரவக்குறிச்சி: கரூரில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மகாகவி மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கம் மற்றும் மாநில அமைப்பு மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் சாா்பில், கரூரிலிருந்து வெங்கமேடு செல்லும் வழியிலுள்ள அரசு காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மகாகவி மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா்.
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு பகுதியான தமிழ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் சாய்வுதளத்துடனான ரேம்ப் வசதி அமைத்து தர வேண்டும். தமிழ் நகா்ப் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த விண்ணப்பம் வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.