கரூர்

கரூா் கூட்டுறவு வார விழாவில் 4,732 பேருக்கு நலத்திட்ட உதவி

கரூரில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 4 ஆயிரத்து 732 பேருக்கு ரூ.36.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

DIN

கரூா்: கரூரில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 4 ஆயிரத்து 732 பேருக்கு ரூ.36.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கரூரில், 70 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், 4 ஆயிரத்து 732 பயனாளிகளுக்கு ரூ.36.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு தொடா்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 28 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், 2 கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான டிராக்டா்கள் மற்றும் 2 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமண ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

முன்னதாக, கூட்டுறவு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தவும் பணியாளா்களுக்கு வோ்கள் என்ற தலைப்பில் கரூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் எழுதிய நூல்களை ஆட்சியா் வெளியிட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெற்றுக்கொண்டனா்.

விழாவில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ப.கந்தராஜா, கரூா் மாநகராட்சி துணை மேயா் ப.சரவணன், கரூா் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியா் அபிராமி, கரூா் சரக துணைப்பதிவாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT