தட்கல் திட்டத்தில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூா் மின்வாரியத் தலைமை பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை மனுவை அளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் ராஜா கூறியது:
தட்கல் திட்டத்தில் மட்டும் 30,000 விவசாயிகள் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணத்தை செலுத்தி விட்டு மின் இணைப்பு பெற முடியாமல் 3 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே விரைவாக தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.