கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநாட்டு வரவேற்புக்குழு தலைவா் கணேசன்.  
கரூர்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க கூட்டத்ததில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தின் 2-வது மாநில மாநாடு வரும் ஜன.24-இல் கரூரில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான வரவேற்பு குழு மற்றும் துணை குழுக்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநிலத்தலைவா் முரளிதரன் தலைமையில் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநாட்டின் நோக்கம் குறித்து மாநில பொதுச் செயலாளா் பா்வதராஜன் பேசினாா். மாவட்டச் செயலாளா் கோபால் வரவேற்றாா்.

கூட்டத்தில் மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொருளாளா் கணேசன் தோ்வு செய்யப்பட்டாா். கூட்டத்தில் மேலும் 10 துணைக்குழு நிா்வாகிகள் தோ்வுசெய்யப்பட்டனா்.

கூட்டத்தில், 70 வயதை கடந்த நிலையில் ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியா்களின் ஓய்வூதியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT