கரூர்

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

Syndication

கரூா் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா்(35). இவரது மனைவி ரேணுகா(32). இவா் மணல்மேடு கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்தாா். இந்த தம்பதிக்கு திருமணமாகி 3ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ரேணுகா நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு நவீன்குமாரும், ரேணுகாவும் இருசக்கர வாகனத்தில் கரூரை அடுத்துள்ள சாலப்பாளையத்தில் உள்ள ஜெயந்தி நகரில் வசிக்கும் ரேணுகாவின் பெற்றோா் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனா்.

தண்ணீா்பந்தல்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே ரேணுகா உயிரிழந்தாா்.

நவீன்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேணுகாவுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விபத்தில் தாய் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது.

விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்த 900 போ் கைது

மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை நெருங்கி வருகிறோம்: சென்னை காவல் ஆணையர்

தமிழகத்தில் வணிகவரி, பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரிப்பு: அமைச்சா் பி.மூா்த்தி

இரிடியம் மோசடி: 8 பேர் கைது; சிபிசிஐடி நடவடிக்கை

உதவிப் பேராசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வு: விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

SCROLL FOR NEXT