மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்பு
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர உணவகத்தில் உள்ள கூட்டரங்கில், குடும்ப நல நிகிச்சை மேற்கொள்ளும் அரசு, தனியார் மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நட்சத்திர உணவகத்தில் உள்ள கூட்டரங்கில், குடும்ப நல நிகிச்சை மேற்கொள்ளும் அரசு, தனியார் மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, இணை இயக்குநர் (பொ) சசிகலா பேசியது: அளவான குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். குடும்ப நல நிகிச்சை மேற்கொள்ள வருவோருக்கு குடும்ப நல சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை மருத்துவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள இடர்களைக் களைவதற்கும், குடும்ப நல அறுவை சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதற்கும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.