பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
பாலமுருகன் கோயிலில் 38 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 23 ஆம் தேதி அனுக்கை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. பாலமுருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்ஸவம், கோயில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை நடத்தி வைத்தனர். இதில், பெரம்பலூர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயில், திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு, அன்றைய தினம் காலை தெப்பக்குளம் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து காவடி புறப்பாடும், மாலை 3 மணிக்கு சப்பரத் தேரோட்டமும் நடைபெறுகிறது.
31 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபாலமுருகன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
மாலை மஞ்சள் நீர், விடையாற்றி விழாவும், இரவு 7 மணிக்கு தாளம் தர்ஷினியின் நாட்டிய நிகழ்ச்சியும், ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் நடுவராக பங்கேற்கும் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா? எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஏப். 6 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.