முகப்பு
பெரம்பலூர்

பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு  பட்டதாரி  ஆசிரியர் கழகம் நன்றி

தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:46 AM
பகிர்:

தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலர் மணி, பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். 
தமிழகத்தில் 200 பள்ளிகளை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய முதல்வரின் செயலைக் கண்டிப்பது. 
சங்க பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு, ஆசிரியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.