பெரம்பலூர்

பாலியல் வன்கொடுமை வழக்குபாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஆதாரம் வெளியீடு

பெரம்பலூரில் நடந்த இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பாக, பாதிப்புக்குள்ளாகிய பெண் மனுதாரரிடம் பேசிய ஆடியோ ஆதாரம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 

DIN


பெரம்பலூரில் நடந்த இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர்பாக, பாதிப்புக்குள்ளாகிய பெண் மனுதாரரிடம் பேசிய ஆடியோ ஆதாரம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 
பெரம்பலூரில் வேலை மற்றும் பிற சலுகைகள் வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்களை அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் வழக்குரைஞர் ப. அருள் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 
இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் துணை கண்காணிப்பாளர் எம். ரெங்கராஜ் மேற்பார்வையில், ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். 
மேலும்,  வழக்குரைஞர் அருள் இந்த விவகாரத்தில் தன்னிடம் உள்ள ஆதாரங்களில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.  பெரம்பலூர் அரசியல் பிரமுகரால் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவுக்கு அழைக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசிய ஆடியோ  பதிவுகளையும் ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்.  இருப்பினும், இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் சுணக்கம் காட்டி வருவதாக புகார்தாரர் தரப்பில் கூறப்பட்டது. 
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட வழக்குரைஞர் ப. அருள் கூறியது:   
விசாரணை நேர்மையாக நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையோரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணையில் முன்னேற்றம் இல்லையெனில், உயர் நீதிமன்றத்தை அணுகி சிபிசிஐடி விசாரணை கோருவோம் என்றார் அவர்.
இதுகுறித்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் எம். ரெங்கராஜ் கூறுகையில், ஆடியோ ஆதாரம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்த பின்னர் இச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT