பெரம்பலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார

DIN

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் நாவுக்கரசன் ஆகியோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.  
மேலும், அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற நபர்களிடம், தலைக்கவசம்  அணிவதன் பயன்களை விளக்கி, சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT