முகப்பு
பெரம்பலூர்

ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நிறைவு

பெரம்பலூரில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான 3-வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நிறைவடைந்தன. 

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:52 am IST
பகிர்:

பெரம்பலூரில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான 3-வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நிறைவடைந்தன. 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில், பெரம்பலூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசிஷேயன் சார்பில் 3 ஆம் ஆண்டு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.   
சனிக்கிழமை 6 வயது முதல் 8 வயதுடையோருக்கு நடத்தப்பட்ட 200 மீ, 300 மீ  போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைத் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். 
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 முதல் 16 வயது மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீ, 600 மீ, 800 மீ ஆகிய பிரிவுகளில் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500 வீரர், வீராங்கனைகள் பதிவு செய்திருந்தனர்.
ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக தங்கப் பதக்கமும், 2-வது பரிசாக வெள்ளிப் பதக்கமும், 4 முதல் 6-வது இடங்களில் வெற்றி பெற்றோருக்கு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.