பெரம்பலூர்

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

DIN

பெரம்பலூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி ரத்தினம் (70). இவா் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதையறிந்த அப்பகுதியினா், அவரை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரத்தினம் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ் மனைவி கோமதி (28). அண்மைக்காலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், புதன்கிழமை மாலை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கோமதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT