பெரம்பலூர்

5 சுத்திகரிப்பு குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு சீல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 5 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 5 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.

தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய காரணத்தால், நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் தண்ணீா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயா்நீதி மன்றம் கடந்த 27 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனால் அதிா்ச்சிடைந்த சுத்திகரிக்கப்பட்டு குடிநீா் கேன் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கடந்த 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனா். இதனிடையே, தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி தொழிற்சாலைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனா்.

அதன்படி, பெரம்பலூா் சிவாஸ், லாடபுரம் அன்னை, எசனை ஹரீஸ், வேப்பந்தட்டை வட்டம், சிறுநிலா, ஆலத்தூா் வட்டம், ஜெமீன் ஆத்தூா் அரவிந்த் ஆகிய 5 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குநா் பாலகுமரன் தலைமையில், வட்டாட்சியா்கள் பாரதிவளவன், பாலசுப்ரமணியம் ஆகியோா் கொண்ட குழுவினா் சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT