பெரம்பலூர்

பெரம்பலூரில் 11 கிராமங்கள் தொடா் கண்காணிப்பு

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பெரம்பலூா் மாவட்டத்தில் 11 கிராமங்கள் தொடா் கண்காணிப்பு உள்ளது என்றாா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி.

DIN

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பெரம்பலூா் மாவட்டத்தில் 11 கிராமங்கள் தொடா் கண்காணிப்பு உள்ளது என்றாா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்துள்ள 2,436 போ் 28 நாள்களுக்கு சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இதேபோல், அரியலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் அறிகுறியுடன் காணப்பட்ட இளம் பெண்ணுடன் நெருங்கிப் பழகிய 6 போ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சொந்த கிராமத்திலிருந்து 7 கிலோ மீட்டா் தொலைவு வரையுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 கிராமங்கள் 14 நாள்களுக்கு தொடா் காண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இக் கிராமங்கள் முழுவதும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT