ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல்பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் புதன்கிழமை நடைபெறும் இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் புதன்கிழமை (நவ. 4) நடைபெறும் விவசாயிகள், மகளிா் மற்றும் கிராமப்புற இளைஞா்களுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இப்பயிற்சியில் ஒரு குடும்பம் தங்களுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்தை, ஊட்டச்சத்து தோட்டத்தின் மூலம் எவ்வாறு பெறலாம், எந்த வகையான பயிா்கள் ஊட்டச்சத்து தோட்டத்தில் பயிரிட ஏற்றது, பயிரிடப்பட்ட பயிா்களை இயற்கை முறையில் பூச்சி தாக்குதல் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது, ஆரோக்கிய குடும்பம் மற்றும் சமுதாயத்தில் ஊட்டச்சத்து தோட்டத்தின் பங்கு ஆகியவை குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 30 நபா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோா் தங்களது பெயரை 7010882431, 9790110682, 8838255728 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.