முகப்பு
பெரம்பலூர்

51 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பெரம்பலூா் ஆட்சியா் உத்தரவு

 பெரம்பலூா் மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள 51 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 பெரம்பலூா் மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்துள்ள 51 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பெரம்பலூா் ஒன்றியத்தில் 7 பள்ளிக் கட்டடங்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 23 பள்ளிக் கட்டடங்களும், ஆலத்தூா் ஒன்றியத்தில் 12 பள்ளிக் கட்டடங்களும், வேப்பூா் ஒன்றியத்தில் 9 பள்ளிக் கட்டடங்களும் என மொத்தம் 51 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளின்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவும், அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் தகவல் அளித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு அல்லது குடியிருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.