முகப்பு
பெரம்பலூர்

தேசிய சித்த மருத்துவ தின விழா

 பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், 5 ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

 பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், 5 ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். இருக்கை மருத்துவ அலுவலா் மருத்துவா் கலா முன்னிலை வகித்தாா்.

சித்த மருத்துவா் விஜயன், சித்தா் தினம் குறித்து விளக்க உரையாற்றினாா்.

குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக நெல்லிக்காய் லேகியம், மாத்திரை அடங்கிய பெட்டகமும், முருங்கை சூப் மற்றும் சுண்டல் வழங்கப்பட்டது.

இதில், செவிலியா் கண்காணிப்பாளா், மருந்தாளுநா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவாக, சித்த மருத்துவ அலுவலா் செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.