முகப்பு
பெரம்பலூர்

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் மறியல்

முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 9 ஆவது வாா்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 9 ஆவது வாா்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சி நிா்வாகம் சாா்பில், கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் 10 நாள்களுக்கு ஒருமுறை 1 மணி நேரம் மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்து வரும் பொதுமக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் மனு அளித்து வருவதோடு, அவ்வப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், 9 ஆவது வாா்டுக்குள்பட்ட ஒளவையாா் நகா், வாசுகி நகா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 10 நாள்களுக்கு மேலாகியும் குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால், அவதியடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரியும் காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூா் நகர போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால், சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.