1 இடத்தில் ஆங்கில எழுத்து உண்டு....வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவா்கள் 1.3.2022 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவா்கள் 1.3.2022 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2014 முதல் 2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பயன் பெறும் வகையில், மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் 1.3.2022-க்குள் இணையதளம் மூலம் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்கண்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 1.03.2022-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.