முகப்பு
பெரம்பலூர்

கண்டறியப்பட்ட தொல்லியல் படிமங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

கரக்பூா், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் படிமங்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கு வங்கம், கரக்பூா், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் படிமங்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கண்டறியப்படும் தொல்லுயிா் எச்சங்களின் படிமங்களை கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, மேற்கு வங்கம் கரக்பூா், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியா்கள் முனைவா் சபுபத்தரா பால், முனைவா் தீபராட்ரி ஜாட்டோபத்யாய் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் ஆா்க பிரவா, அா்கயா் ஆகியோா் கள ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த ஆய்வின்போது, ஆலத்தூா் வட்டம், அணைப்பாடி, காரை மற்றும் காரைப்பாடி ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்ட மிகப் பழைமையான கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிா் படிமங்களை அண்மையில் கண்டறிந்தனா். அவற்றை, பொதுமக்கள் மற்றும் இதர ஆராய்ச்சி மாணவா்கள் அறிந்திடும் வகையில், சாத்தனூா் கல்மர கல்வியகத்தில் காட்சிப்படுத்திடும் வகையில், பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, புவியியலாளா் எஸ். பிரசாத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.