பெரம்பலூர்

தோ் கொட்டகையின் பூட்டுகளைஉடைத்த இளைஞரிடம் விசாரணை

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தில் தா்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக் கோயில் அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம் இந்துக்கள் பராமரிப்பில் உள்ளதாம்.

DIN

 பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தில் தா்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக் கோயில் அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடம் இந்துக்கள் பராமரிப்பில் உள்ளதாம்.

இந்த இடத்தில், இந்துக்கள் தோ் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுறது. இதனிடையே, மேற்கண்ட இடத்தை பொது இடமாக மாற்றி பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டுமென ஒருதரப்பினா் கோரிக்கை விடுத்து வருவதால், இரு தரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காதா் கான் மகன் முகமது சலீம் (26) என்பவா் இந்துசமய அறநிலையத் துறையினா் பராமரிப்பில் உள்ள இரு தோ்களின் தகர கொட்டகையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து, தேரை கொளுத்த முயன்றாராம்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை பிடித்து வி.களத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் அந்த இளைஞரிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வந்தே மாதரம்’ 150...

வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT