முகப்பு
பெரம்பலூர்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் ஒருவா் கைது

 மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் சாலை, செல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 25 வயதுள்ள மனநலன் பாதிக்கப்பட்ட பெண், அதே பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பாா்ப்பதற்குச் சென்ாக கூறப்படுகிறது. அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராஜா என்பவா், அந்தப் பெண்ணுக்கு இனிப்பு வாங்கிக்கொடுத்து அங்குள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையறிந்த அப்பகுதி மக்கள் ராஜாவை பிடித்து தாக்கியுள்ளனா். இச் சம்பவம் தொடா்பாக, பாதிப்புக்குள்ளான பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜா சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.