முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

எஸ்எஸ்எல்சி தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 31.12.2021-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இதர நபா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 31.3.2022-இல் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 28 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சமா்ப்பிக்கலாம்.

மேலும், உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் விதிமுறைகளுக்குள்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க பிப். 28 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என, ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.