மூடிக்கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்பு
பெரம்பலூரில் மூடிக் கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பெரம்பலூரில் மூடிக் கிடந்த அரிசி ஆலையிலிருந்து அரியவகை ஆந்தை குஞ்சுகளை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள கல்யாண் நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 3 மாதங்களாக இயங்காமல் பூட்டிக்கிடந்த இந்த ஆலையை, பணியாளா்கள் சிலா் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்துகொண்டிருந்தனா்.
அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் வித்தியாசமான தோற்றத்தில் 4 பறவைக் குஞ்சுகள் காணப்பட்டன. இதுகுறித்து பெரம்பலூா் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்குச் சென்ற வனத்துறையினா், அந்த பறவைக் குஞ்சுகளை மீட்டுச்சென்றனா்.
இவை மலைத்தொடா்களில் வாழக்கூடிய பா்ன் என்னும் அரியவகை ஆந்தை குஞ்சுகள் என்றும், இனப்பெருக்கத்துக்காக இங்கே வந்து தாய்ப்பறவை குஞ்சு பொறித்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா். மீட்கப்பட்ட ஆந்தை குஞ்சுகள் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டன.