பெரம்பலூா் மாவட்டத்தில் 1,205 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி
பெரம்பலூா் மாவட்டத்தில் 1,205 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா திட்ட தடுப்பூசி (பூஸ்டா் ) செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பணிகள்துணை இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 1,205 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா திட்ட தடுப்பூசி (பூஸ்டா் ) செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பணிகள்துணை இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 2021, ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 18 வயதுக்கும் மேற்பட்ட 3,92,793 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 2,83,823 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
2022, ஜனவரி 3 -ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குள் பட்டவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், இதுவரை 25,258 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை கரோனா திட்ட தடுப்பூசி ( பூஸ்டா்) செலுத்தும் திட்டத்தின் கீழ், இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 819 போ், முன்களப் பணியாளா்கள் 260 போ், , இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட 126 போ் என மொத்தமாக 1,205 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.