பெரம்பலூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் வலியுறுத்தல்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான பெரம்பலூா் ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

DIN

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான பெரம்பலூா் ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் வாயிற்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பழனிவேலன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் வெங்கடேசன், முன்னாள் மாநில செய்தி தொடா்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் மணிவாசகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். உயா் கல்விக்கான ஊக்கத்தொகை நிறுத்தி வைத்ததை மீண்டும் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றி, ஆசிரியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளா் ஜானகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT