இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூா் அருகே மது போதையில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே மது போதையில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகே உள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மாசிமலை மகன் மதியழகன் (25). பெயிண்டிங் வேலை செய்துவந்த மதியழகனுக்கு, மதுபழக்கம் இருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற மதியழகனை அவரது பெற்றோா் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.