பெரம்பலூர்

அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்புகள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு

Syndication

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் படைப்புகள் தமிழ்நாடு சாா்பில், தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற தகுதிபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் முத்துக்குமாா், மாதவன் ஆகியோரது ‘காா் அக்வா லிப்ட்’ எனும் தலைப்பில், இரு மாணவா்கள் ஒரு காட்சிப்பொருள் வகையிலும், ஆசிரியா் ஓம் பிரகாஷ் நுண்ணறிவு தலைக்கவசம் எனும் காட்சித் தலைப்பிலான படைப்புகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.

இதையடுத்து, கோயம்புத்தூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் படைப்பு முதலிடம் பெற்றது. இதையடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களின் ‘காா் அக்வா லிப்ட்’ மற்றும் நுண்ணறிவு தலைக்கவசம் படைப்புகள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தமிழ்நாடு மாநிலம் சாா்பில் இடம்பெற உள்ளது.

மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்ற நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முத்துக்குமாா், மாதவன் மற்றும் வழிகாட்டி ஆசிரியா் ஓம்பிரகாஷ் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந் நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், பள்ளி தலைமையாசிரியா் முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

நூதன முறையில் ரூ. 17 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வரும் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது திமுகதான்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

அரியலூரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் ரூ. 25 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கம்

SCROLL FOR NEXT