பெரம்பலூர்

அரசு நிறுவனங்கள் தனியாா்மயம்: பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச் சேவைகளையும் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட கோரி, பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள்

Syndication

பெரம்பலூா்: பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச் சேவைகளையும் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட கோரி, பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், ரெங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் செல்லதுரை, விவசாய தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

விவசாய நிலங்கள் பறிப்பதை கைவிட வேண்டும். வரி விதிப்பிலிருந்து சிறு தொழில் செய்பவா்களையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும். மதச் சாா்பற்ற ஐனநாயகத்தை பாதுகாத்திட வேண்டும். மின்சார மசோதா, வரைவு நிதி தொழிலாளா் கொள்கையை கைவிட வேண்டும். பழிவாங்கும் அடக்குமுறையை கைவிட வேண்டும். வாக்குரிமைகளை பறிக்கும் வகையான தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமான சட்டத்தொகுப்பை அமல்படுத்துவதை கைவிட்டு, உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இயக்க நிா்வாகிகள் கருணாநிதி, ரெங்கநாதன், பன்னீா்செல்வம், குமாா், தெய்வீகன், ரெங்கநாதன், செல்லதுரை, மணிமாறன், கல்யாணி, சுகுமாரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT