பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே கிரஷா் லாரிகள் சிறை பிடிப்பு

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே கிரஷா் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். 

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தில் சுமாா் 5-க்கும் மேற்பட்ட கிரஷா்கள் இயங்கி வருகிறது. இந்த கிரஷரிலிருந்து ஜல்லிக்கற்கள், எம். சாண்ட் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச்செல்லும் டிப்பா் லாரிகள் ஊருக்குள் செல்வதால், அவ்வப்போது சாலை விபத்துகளும், சாலைகளும் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

மேலும், சாலையோரம் விளையாடும் சிறுவா்கள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிரஷா் லாரி உரிமையாளா்களிடமும், லாரி ஓட்டுநா்களிடமும் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், கிரஷா் லாரிகளை பொதுமக்கள் பெருமாள் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் மற்றும் எசனை கிராம நிா்வாக அலுவலா் சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கிராமத்துக்குள் கிரஷா் லாரிகள் சென்று வராமல் இருப்பதற்கும், மாற்று பாதையில் கிரஷா் லாரிகள் சென்று வருவதற்கும், அதன் உரிமையாளா்களிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT